ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/06/2020

ரிசர்வ் வங்கியின் கீழ் கூட்டுறவு வங்கிகள்


புதுடெல்லி,
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று காணொலிக் காட்சி மூலம் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கியின் கீழ் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். நாடு முழுவதும் சுமார் 1,500 கூட்டுறவு வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளை ரிசர்வ் வங்கியின் மேற்பார்வையின் கீழ் கொண்டு வருவதன் மூலம் சுமார் 8.6 கோடி முதலீட்டாளர்களின் 4.84 லட்சம் கோடி பணத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
மேலும் விண்வெளித்துறையில் தனியாரை அனுமதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
இந்த அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும், குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு உடனடியாக இது அமலுக்கு வரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் உள்ள குஷினகர் விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்றும் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459