ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை - கோவா முதல்வர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/06/2020

ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை - கோவா முதல்வர்


பனாஜி : நாடெங்கும் கொரோனா ஊரடங்கால் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது கட்டாயமில்லை என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஊரடங்கால் பள்ளி மற்றும் கல்லூரிகள் கால வரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஸ்மார்ட் மொபைல் மற்றும் இன்டர்நெட் சேவை ஆகிய சில அடிப்படை உபகரணங்கள் தேவைப்படுகிறது. பல ஏழை எளிய மாணவர்களால் இவ்வாறு கல்வி பயில முடியாது என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பல்வேறு தரப்புகளில் இருந்தும் ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆன்லைன் வகுப்புகள் நடத்த கட்டாயமில்லை என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கொரோனா தொற்றால் இந்தியாவில் பலருடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. கோவாவிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் இணைய வசதி இல்லை. அனைத்து மாணவர்களிடமும் ஸ்மார்ட் போன் வசதியும் கிடையாது. இதனால் ஆன்லைன் வகுப்புகளைக் கற்கக் கோரி மாணவர்களைக் கட்டாயப்படுத்தக் கூடாது. எனினும் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு பாடம் நடத்துவதற்கு சுமார் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வி கட்டாயம் என்று எவ்வித அறிக்கையும் வெளியாகவில்லை
. அனைத்துப் பள்ளிகளும் இணைய வழிக் கல்வியைக் கட்டாயப்படுத்தாமல் முழு பாடத்திட்டத்தையும்கற்பிக்க வேண்டும்.
கொரோனா தொற்று பரவுதலை பொறுத்து பள்ளிகள் திறப்பது குறித்து ஜூலை 15 க்கு பின் முடிவு செய்யப்படும். தற்போது ஆசிரியர்கள் பள்ளிக்கு வந்து சிறப்பு பாடத்திட்டத்தை பயில்வதற்கு முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும். அதற்காக நாளை முதல் பள்ளிக்கு வர வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459