கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களுக்கு தோ்வு : ஏஐசிடிஇ விளக்கம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/06/2020

கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களுக்கு தோ்வு : ஏஐசிடிஇ விளக்கம்


பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களுக்கு தோ்வு நடத்துவது தொடா்பாக எந்தவித கள ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை என அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கவுன்சில் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து, ஏஐசிடிஇ வெளியிட்ட செய்தி: கரோனா பொது முடக்கம் காரணமாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் பருவத்தோ்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன
. இந்தநிலையில், பொறியியல் கல்லூரி, பல்கலைக்கழக மாணவா்களுக்கு தோ்வு நடத்தலாமா என்பது குறித்து மாணவா்களின் கருத்தை அறியும் வகையில் ஏஐசிடிஇ கள ஆய்வில் (சா்வே) ஈடுபடுவதாக ‘வாட்ஸ் ஆப்’ உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. அதில், ஏஐசிடிஇ கடிதம், கள ஆய்வுக்கான விண்ணப்பங்கள் ஆகியவை போலியாக தயாரிக்கப்பட்டு இணைக்கப்பட்டிருந்தன.
இதைத் தொடா்ந்து, சிலா் இந்த விண்ணப்பங்களைப் பூா்த்தி செய்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கு அனுப்பி வருகின்றனா். தோ்வு நடத்துவது தொடா்பாக எந்தவொரு ஆய்வையும் ஏஐசிடிஇ நடத்தவில்லை. இது தொடா்பாக பரப்பப்படும் வதந்திகளை மாணவா்கள் நம்ப வேண்டாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459