தொடர் இருமலை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


14/06/2020

தொடர் இருமலை கட்டுப்படுத்தும் அற்புத கசாயம்


 தொடர்ந்து வரும் இருமலைக் கட்டுப்படுத்த தூதுவளை சித்தரத்தை கசாயத்தைப் பயன்படுத்தி பலன் அடையுங்கள்.
தேவையான பொருட்கள்
தூதுவளைக் கீரை   –  ஒரு கைப்பிடி
சித்தரத்தை.              –  ஒரு துண்டு
உலர்ந்த திராட்சை   –  10
எலுமிச்சம் பழம்.      –  அரை பழம்
செய்முறை
முதலில் தூதுவளைக் கீரையை ஆய்ந்து சுத்தப் படுத்திக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் 400 மி.லி தண்ணீர் ஊற்றி தூதுவளை, சித்தரத்தை மற்றும் உலர் திராட்சையைப் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். நன்கு கொதிக்க வைத்து 150 மி.லி அளவாகச் சுண்ட வைத்து இறக்கி  வடிகட்டி அதில் பாதி எலுமிச்சம் பழச்சாற்றைக் கலந்து நன்கு கலக்கிக் குடிக்கவும்.
பயன்கள்
இந்தக் கசாயம் இருமலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனே நிறுத்த உதவும் அருமருந்தாகும். இந்தக் கசாயத்தைத் தயார் செய்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக குடித்து வரவும்.

இரவு படுக்கப் போகும் முன்
வெற்றிலை (2), மிளகு(2) , உலர் திராட்சை (5) இவை மூன்றையும் சேர்த்து  தினமும் படுக்கப்போகும் முன்  வாயில் போட்டு மென்று தின்று விழுங்கவும்.
குறிப்பு
அனைத்து காய்களையும் , கீரைகளையும் நீராவியில் வேகவைத்து உணவாக சாப்பிட்டு வரவும். பச்சை மிளகாய்க்கு மாற்றாக  இஞ்சியையும் வர மிளகாய்க்கு மாற்றாக  மிளகையும்
பயன்படுத்தவும்
KOVAI  HERBAL  CARE 
FOOD CONSULTANCY  CENTER
– கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நலம் மற்றும் உணவு வழி(காய்கறி) மருத்துவ ஆலோசகர்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459