அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் : பிரதமர் - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/06/2020

அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள் : பிரதமர்


கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார் புதுடெல்லி:
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுவெளியில் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருப்பதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.  ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள் அமித்ஷா, ஹர்ஷவர்தன், ஐசிஎம்ஆர் தலைமை இயக்குநர் பல்ராம் பார்கவா பங்கேற்றனர்.
தற்போதுள்ள கொரோனா தடுப்பு பரிசோதனை, நோயாளிகளுக்கான படுக்கைகள், மருத்துவ சேவைகள் குறித்தும் அதனை அதிகரிப்பது தொடர்பான தகவல்கள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
அதிகமாக பாதிப்புக்குள்ளான மகாராஷ்டிரா, டெல்லி, தமிழகத்தில் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுபடுத்துவதற்கான ஆலோசனை குறித்ததும் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அவசர காலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு மத்திய சுகாதாரத்துறைக்கு பிரதமர் மோடி  அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.  மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுடன் ஆலோசித்து நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459