நிலங்களை மீட்க வேண்டும்.. நேபாளத்தில் சீனாவிற்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் போர்க்கொடி.. - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/06/2020

நிலங்களை மீட்க வேண்டும்.. நேபாளத்தில் சீனாவிற்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் போர்க்கொடி..


காத்மாண்டு: சீனாவால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை, பேச்சுவார்த்தை மூலம்' திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேபாள எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் எம்பிக்கள் 3 பேர் அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.' சீனா தனது நிலத்தை ஆக்கிரமித்து திபெத்திற்கான சாலை கட்டுமானத்திற்கு பயன்படுத்துவதாக நேபாள அரசாங்கம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் ஒப்புக் கொண்டது. இதை அடுத்து, எதிர்க்கட்சியான நேபாளி காங்கிரஸ் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அதன் மூலம் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசத்தை மீண்டும் கொண்டு வருமாறு பிரதமர் கேபி சர்மா ஓலி அரசை வலியுறுத்தி உள்ளது. நேபாளி காங்கிரஸ் எம்பிக்கள் 3 பேர் பிரதிநிதிகள் சபையின் செயலாளருக்கு எழுதிய கடிதத்தில், "டோலாகா, ஹம்லா, சிந்துபால்சௌக், கோர்கா மற்றும் ரசுவா போன்ற பல்வேறு மாவட்டங்களில் சுமார் 64 ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்களை சீனா ஆக்கிரமித்துள்ளது. சீனாவிற்கு சிக்கல்!சீனா ஆக்கிரமிப்புகோர்க்காவின் 35 வது தூண் எண்ணை நேபாளத்தில் இருந்து சீனா மாற்றியதால், கோர்க்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ருய் கிராமம் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது,
மேலும் அங்கிருந்த 72 வீடுகள் இப்போது சீனாவின் திபெத் தன்னாட்சி பிராந்தியத்தின் கீழ் உள்ளன. இதேபோல், தர்ச்சுலா மாவட்டங்களின் ஜியுஜியுவில் அமைந்துள்ள 18 வீடுகளும் சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.10 இடங்களில் ஆக்கிரமிப்புவேளாண் அமைச்சின் கணக்கெடுப்புத் துறை தயாரித்த ஒரு அறிக்கையில், 11 இடங்களின் பட்டியலில் 10 இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளதாக கூறப்பபட்டுள்ளது. அதாவது 33 ஹெக்டேர் நேபாளி நிலங்களை உள்ளடக்கிய 10 இடங்களை இயற்கை எல்லையாக செயல்படும் ஆறுகளின் ஓட்டத்தைத் திசைதிருப்பி சீனா ஆக்கிரமித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
.பேச்சுவார்த்தை நடத்துங்கள்எனவே சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட நேபாளத்தின் பகுதிகள் மற்றும் கிராமங்களை ராஜாங்க ரீதியான உரையாடல்களை நடத்துவதன் மூலம் மீட்க வேண்டும் என்ற அரசாங்கத்திற்கு அறிவுறுத்தி இந்த தீர்மானத் தீர்மானத்தை நாங்கள் தாக்கல் செய்துள்ளோம்" என்று கூறியுள்ளனர்.நேபாளம் வரைபடம்இதனிடையே அண்டையில் நேபாளம் தனது நாட்டு வரைபடத்தை புதுப்பித்து சர்ச்சைக்குரிய வகையில் வெளியிட்டது. அதன் பிராந்தியத்தில் கலபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா ஆகிய இந்திய பகுதிகளை உள்ளடக்கி புது வரைபடத்தை வெளியிட்ட அடவாடி செய்தது. இந்திய புதிய வரைபடம் "வரலாற்று உண்மைகள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் அல்ல" என்று இந்தியா கடுமையாக கண்டித்தது. புதிய மேம் விவகாரத்தால் இந்தியா மற்றும் நேபாளம் இடையே உறவில் விரிசல் விழுந்துள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459