இன்றைய ராசிபலன் - ஆசிரியர் மலர்

Latest

 




 


12/06/2020

இன்றைய ராசிபலன்


மேஷம்

தன்னம்பிக்கையுடன்   பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.


ரிஷபம்

உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். அந்தஸ்து உயரும் நாள்.


மிதுனம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்றவேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் தள்ளிப் போன விஷயங்கள் முடியும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் வரும் . நல்ல மாற்றங்கள் ஏற்படும் நாள்.


கடகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினைகள் உருவாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் குறை கூறுவார்கள். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


சிம்மம்


உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதரர்களின் ஒத்துழைப்பு இருக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சகஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். திறமை வெளிப்படும் நாள்.


சிம்மம்

இன்று முக்கியமுடிவுகளை திறம்பட எடுக்கும் ஒரு தீர்வான நாள். அலுவலகம் சென்று வரும் பெண்கள் நிதானத்துடன் நடந்து கொள்வது அவசியம். தங்களால் இயன்ற தான தர்மங்களை செய்து வாருங்கள். தாயாரின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள்.


கன்னி

ராஜ தந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ராஜ தந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பர். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். வெற்றி பெறும் நாள்.4


துலாம்

குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்
. வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.


விருச்சிகம்

எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதரி உதவுவார். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் வேலைகள் விரைந்து முடியும். நன்மை கிட்டும் நாள்.


தனுசு


குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்து பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். புதியவரின் நட்பு கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு  களை கட்டும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.


மகரம்

இன்று முக்கியமான ஒரு நபரை சந்திக்க நேரும். வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு உற்சாகமளிக்கும். சந்தோசத்திற்கு குறைவிருக்காது. முகம் சுளிக்காமல் வேலை செய்வீர்கள். நல்லது நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை  சந்திக்க வேண்டி இருக்கும்.  அலுவலக பணிகள் மூலம் டென்ஷன்  உண்டாகும். கவனமாக பேசுவது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களுடன் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது.  கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை வரலாம்.


கும்பம்


இன்று சுப காரியங்கள் பற்றிய பேச்சுவார்த்தை முடிவுக்கு வரும்.  நீண்ட நாட்களாக இருந்த வழக்கு, வியாஜ்ஜியங்கள் முடிவுக்கு அதுவும் உங்களுக்கு சாதகாமாகவே வரும். பெரியோரின் ஆசி கிடக்கும். ஆக்கப்பூர்வமான யோசனைகள்  தோன்றினாலும் அதை செயல்படுத்துவதில் தாமதம் உண்டாகும்
. பேச்சை கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது.  மற்றவர்களுடன்  கருத்து வேற்றுமை ஏற்படாமல் கவனமாக  இருப்பது நல்லது.  தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.  ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும்.



மீனம்


இன்று அனுகூலமான நாள் தான். வெற்றிக்கு துணை புரிய இல்லத்தில் இருப்பவர்கள் தயாராக இருப்பார்கள். சிலர் மன வருத்தத்தை உண்டாக்குவார்கள். எதிர்பார்த்திருந்த நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தெய்வ பக்தி அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.  ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைப்பளு இருக்கும். சக ஊழியர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459