கரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தும் இந்தியா - ஆசிரியர் மலர்

Latest

 




 


30/06/2020

கரோனா தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்தும் இந்தியா



கொரோனா வைரஸூக்கு முதல்முதலாக இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசி மருந்தை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது
.உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், மறுபக்கம் அதற்கான தடுப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் குறித்து ஆய்வு செய்யும் பணிகளில் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், இந்தியாவில் முதல்முறையாக கரோனா வைரஸூக்கு எதிராக தடுப்பூசி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைரலாஜி நிறுவனத்துடன் இணைந்து ஹைதராபாத்தைத்  தலைமையிடமாகக் கொண்ட பாரத் பயோடெக் நிறுவனம்,
‘கோவாக்சின்’ என்ற தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

தொடர்ந்து, இதனை மனிதர்களிடம் சோதனைக்கு உட்படுத்த இந்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு ஒப்புதல் தெரிவித்துள்ளது. ஜூலை மாதம் முதல் நாடு முழுவதும் இரு கட்டங்களாக மனிதர்களிடம் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
உலக நாடுகளுக்கு மருந்துகளை ஏற்றுமதி செய்வதில் முன்னணி நாடாகத் திகழும் இந்தியா, இந்த சோதனையிலும் வெற்றி பெறும் பட்சத்தில் கரோனாவை ஒழிப்பதில் முக்கியப் பங்காற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459