நாகை மாவட்டம், தரங்கம்பாடியில், தனியார் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தை, இளம் விஞ்ஞானி முரளி, 28, என்பவர் நடத்தி வருகிறார். மக்கள் பயன்படுத்தக்கூடிய அறிவியல் சார்ந்து, 300 புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி உள்ளார்.பல பொறியியல் கல்லுாரி மாணவர்கள், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க, உறுதுணையாக இருந்துள்ளார்.
‘கண்டுபிடிப்புகள் அனைத்திற்கும் அங்கீகாரம் வேண்டும். அவற்றை, பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்’ என, அரசிடம் பலமுறை முறையிட்டும், அங்கீகாரம் கிடைக்கவில்லை
. வாழ்வாதாரம் மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளர்ச்சிக்காக, வங்கியில் கடன் கேட்டும் கிடைக்கவில்லை. இதற்கிடையில், ஆராய்ச்சி நிறுவனம் உள்ள இடம் கோவிலுக்கு சொந்தமானது என்பதால், நிறுவனத்தை மாற்ற, அதிகாரிகள் வலியுறுத்தினர்.

மனவேதனை அடைந்த முரளி, 10 ஆண்டு கால உழைப்பான ஆராய்ச்சி நிறுவனத்தை மூடியதோடு, கண்டுபிடிப்பு மாதிரிகள், ஆவணங்கள், பாராட்டு சான்றிதழ்களை தீயிட்டு அழித்தார்.சில கண்டுபிடிப்புகளை மட்டும், மாணவர்கள் பயனுக்காக, அரசு பள்ளிகளுக்கு வழங்கியுள்ளார்.
It's not a good please try again and again.we will get success soon
ReplyDelete