தமிழகத்தில் உள்ள காப்பகத்தில் கொரோனா :தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/06/2020

தமிழகத்தில் உள்ள காப்பகத்தில் கொரோனா :தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு



கோப்பு புகைப்படம்)
தமிழகத்தில் உள்ள காப்பகத்தில் இருக்கும் குழந்தைகளை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு என்னென்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உயிரிழப்புகளும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு உயரத் தொடங்கியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் காப்பகத்தில் உள்ள குழந்தைகளை கொரோனா பரவலில் இருந்து பாதுகாக்க தமிழக அரசு எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன என கேள்வி எழுப்பி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

முன்னதாக சென்னையில் குழந்தைகள் காப்பகத்தில் உள்ள 35 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கு எப்படி கொரோனா தொற்று ஏற்ப்பட்டது. மேலும் கொரோனா பரவுதலை தடுக்க அரசு என்ன திட்டங்கள் வைத்திருக்கிறது போன்ற கேள்விகளை எழுப்பி அரசு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459