மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் தொகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு காலமும் தள்ளிப்போகும்
மக்கள் தொகை
மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் தொகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு காலமும் தள்ளிப்போகும்.
புதுடெல்லி:
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகை கணக்கெடுப்பது வழக்கம். முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ம் ஆண்டு நடைபெற்றது.
அடுத்ததாக 2021-ம் ஆண்டுக்கு கணக்கெடுப்பு நடத்த வேண்டும். இந்த கணக்கெடுப்பு ஓராண்டுக்கு முன்னதாக தொடங்கி விடுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து செப்டம்பர் மாதம் வரை முதல் கட்ட கணக்கெடுப்பும், அடுத்த ஆண்டு பிப்ரவரி 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை 2-வது கட்ட கணக்கெடுப்பும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
அதாவது முதல்கட்ட கணக்கெடுப்பின்போது வீடுகள் பற்றிய விவரங்கள் சேரிக்கப்பட்டு எண்கள் குறிக்கப்படும். 2-வது கட்ட கணக்கெடுப்பில் மக்கள் தொகை பற்றிய விவரங்களும், குடும்ப விவரங்களும் சேகரிக்கப்படும்.
கொரோனா பிரச்சினையால் 3 மாதத்திற்கு கணக்கெடுப்பு நடத்துவது தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி ஜூலை மாதம் கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ஆனால் கொரோனா நோய் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் கணக்கெடுப்பு நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுசம்பந்தமாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி உள்ளது.
அப்போது முன்னாள் பதிவாளர் ஜெனரல்களான ஏ.ஆர். நந்தா, ஜே.கே. பாந்தியா போன்றவர்களின் ஆலோசனைகளும் கேட்கப்பட்டது. அவர்கள் தற்போதைய நிலையில் கணக்கெடுப்பு நடத்துவது கடினம். எனவே அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கி உள்ளனர்.
எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு நடத்த மத்திய அரசு திட்டமிட்டு இருக்கிறது. இதன் காரணமாக மக்கள் தொகை அதிகாரப்பூர்வ அறிவிப்பு காலமும் தள்ளிப்போகும்.
மமக்நிநிலைஏற்பட்டுள்ளு

No comments:
Post a Comment