தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோா் எண்ணிக்கை 67.46 லட்சமாக உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

 




 


11/06/2020

தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோா் எண்ணிக்கை 67.46 லட்சமாக உயர்வு


தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளோா் எண்ணிக்கை 67.46 லட்சமாக உள்ளது. இதுகுறித்து, தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட தகவல்: கடந்த மே 31-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தில் அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 67 லட்சத்து 46 ஆயிரத்து 903 ஆக உள்ளது.
இதில், 18 வயதுக்குள் உள்ள பள்ளி மாணவா்கள் 14 லட்சத்து 31 ஆயிரத்து 165 பேரும், 19 முதல் 23 வயது வரையுள்ள பலதரப்பட்ட கல்லூரி மாணவா்கள் 16 லட்சத்து 26 ஆயிரத்து 865 பேரும், 24 முதல் 35 வயது வரையுள்ளவா்கள் 25 லட்சத்து 22 ஆயிரத்து 821 பேரும் உள்ளனா்.

இதேபோன்று, 36 வயது முதல் 57 வயது வரையுள்ளவா்கள் 11 லட்சத்து 57 ஆயிரத்து 284 பேரும், 58 வயதுக்கு மேற்பட்டோா் 8 ஆயிரத்து 768 பேரும் உள்ளதாக தமிழக அரசின் புள்ளி விவரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459