சென்னை போலீசில் கொரோனாவின் பாதிப்பு அன்றாடம் அதிகரித்து வருகிறது. சென்னை போலீசில் 511 பேர் ஏற்கனவே கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை புதிதாக மேலும் 31 போலீசாரை கொரோனா தொற்றியது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 542 ஆக உயர்ந்தது. சென்னை போலீசின் புதிய பாதிப்பு பட்டியலில் உயர் அதிகாரிகள் யாரும் இடம் பெறவில்லை என்று தெரிய வந்துள்ளது.
போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் நேரடி கண்காணிப்பில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை உயிர்ப்பலி இல்லாமல் 200 பேர் பூரண குணம் அடைந்து பணிக்கு திரும்பி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பாதுகாப்பு பணிக்கு சென்றவர்கள் மூலம் கொரோனா தொற்று முதலில் பரவியது. தற்போது போலீஸ் குடியிருப்புவாசிகள் வாயிலாக தொற்று அதிக அளவில் பரவி வருவதாக சொல்லப்படுகிறது. எனவே உயர் அதிகாரிகள் போலீஸ் குடியிருப்புகளில் அதிக கவனம் செலுத்தி கொரோனா தொற்று பரவுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்ட போலீசாரின் வேண்டுகோளாக உள்ளது.
No comments:
Post a Comment