சென்னை : தெற்கு ரயில்வேயில் 96 பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே தேர்வாகி இருப்பது மோசடியான செயல் என்று அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார். தெற்கு ரயில்வேயில் சரக்கு வண்டி பாதுகாவலர் பணியிடங்களுக்கு நடத்தப்பட்ட ஆன்லைன் தேர்வில், சுமார் 5000 பேர் கலந்து கொண்டனர். இதில் 3000 பேர் வரை தமிழர்கள் ஆவர். இந்தநிலையில், ஆன்லைன் தேர்வில் 5 தமிழர்கள் மட்டுமே வெற்றி பெற்றதாக முடிவுகள் வெளியாகி இருக்கிறது. மீதமுள்ள 91 இடங்களுக்கும் வட மாநிலத்தவர்கள் தேர்வானதாக அறிவிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தேர்வு முடிவுகள் ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் தென்னக ரயில்வேயின் தமிழர் விரோதப்போக்கின் மற்றொரு வெளிப்பாடாக இது உள்ளது என்றும் மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றம் சாட்டி இருக்கிறார்.
தேர்வு முடிவுகள் ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்றும் தென்னக ரயில்வேயின் தமிழர் விரோதப்போக்கின் மற்றொரு வெளிப்பாடாக இது உள்ளது என்றும் மதுரை எம்.பி. வெங்கடேசன் குற்றம் சாட்டி இருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தெற்கு ரயில்வே நடத்திய தேர்வில் தமிழர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். ரயில்வே தேர்வுகள் பல்லாயிர ஆண்டுகளாகவே வட இந்தியர்களுக்கு சாதகமாகவே நடத்தப்படுகிறது என்பது அவரின் குற்றச்சாட்டாகும்.
ஆன்லைன் தேர்வு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை புறம் தள்ளாமல் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
ஆன்லைன் தேர்வு குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை புறம் தள்ளாமல் விசாரணைக்கு ஆணையிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அவர் கூறுகையில்,’பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருவதைப் போலவே தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசுத் துறைகள், பொதுத்துறை நிறுவனங்கள் ஆகியவற்றில் உள்ள இடைநிலை மற்றும் கடைநிலை பணிகள் அனைத்தும் முழுக்க முழுக்க உள்ளூர் மக்களைக் கொண்டே நிரப்பப்பட வேண்டும் என்ற நிலை உறுதி செய்யப்படுவது மட்டுமே இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும்.
அதற்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும். அத்துடன் சரக்குத் தொடர்வண்டி கார்டு பணிக்கான துறை சார்ந்த போட்டித் தேர்வை ரத்து செய்து விட்டு, தேர்வுத்தாளில் விடை எழுதும் வகையில் அத்தேர்வை மீண்டும் வெளிப்படையாக நடத்த தொடர்வண்டித்துறை முன்வர வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment