தவறான மருந்து சாப்பிட்டு பிளஸ் 1 மாணவர் பலி - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/06/2020

தவறான மருந்து சாப்பிட்டு பிளஸ் 1 மாணவர் பலி



மதுரை மாவட்டம் தேனூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் பிச்சுமணி.இவரது மகன் (16) அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். அண்மையில் பள்ளி மாணவனுக்கு ஏற்பட் உடல்நலக்குறைவுக்கு, மருத்துவர்கள் சத்து டானிக் சாப்பிட அறிவுறுத்தியுள்ளனர்.
அதன்படி மாணவர் டானிக்கை சாப்பிட்டு வந்துள்ளார். இந்நிலையில் மாணவர் தவறுதலாக வேறு டானிக்கை சாப்பிட்டுள்ளார். இதில் மயங்கி விழுந்த மாணவரை மீட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதித்தனர்.
அங்கு மாணவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் கடந்த 2 நாள்களாக சிகிச்சையில் இருந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அலங்காநல்லூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459