தமிழகத்தில் கடந்த சில தினங்களாக நாள்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்றும் ஒரே நாளில் 1,989 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் நோயாளிகளின் எண்ணிக்கை 42,582 ஆக உயர்ந்துள்ளது
மேலும், தமிழகத்தில் ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 1,362 பேர் கொரோனாவில் இருந்து நோயிலிருந்து மீண்டு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். நேற்றும் ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பி இருந்தனர். ஒட்டு மொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23,409 ஆகப் பதிவாகி இருக்கிறது.

சென்னையைப் பொறுத்தவரை இன்று ஒரே நாளில் மட்டும் 1,484 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்புக்கு 30 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக இதுவரை 397 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment