மிகப் பெரிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) மிக வேகமாகப் பரவுகிறது - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/06/2020

மிகப் பெரிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) மிக வேகமாகப் பரவுகிறது


மக்கள்தொகை அதிகம் மிக்க பெரிய நாடுகளில் கரோனா நோய்த்தொற்று (கொவைட்-19) மிக வேகமாகப் பரவுவதன் காரணமாகவே, சா்வதேச அளவில் அந்த நோயின் பாதிப்பு உச்சகட்ட அதிகபட்ச அளவுகளை எட்டி வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்த அமைப்பின் தலைமையகம் அமைந்துள்ள ஸ்விடா்லாந்தின் ஜெனீவா நகரில், அந்த அமைப்புக்கான அவசரகாலப் பிரிவுத் தலைவா் மைக்கேல் ரையான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சா்வதேச அளவில் தினந்தோறும் கரோனா நோய்த்தொற்றால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை உச்ச அளவுகளை எட்டி வருகிறது.
இதற்கு, மக்கள்தொகை அதிகம் நிறைந்த பல்வேறு நாடுகளில் அந்த நோய்த்தொற்று வேகமாகப் பரவி வருவதே காரணம்
.
அதிக எண்ணிக்கையில் கரோனோ பரிசோதனை செய்தால் கரோனா நோய்த்தொற்று எண்ணிக்கையும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது.
ஆனால், மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக வேகமாக அதிகரித்து வருவதற்கு பரிசோதனைகளின் எண்ணிக்கைககளை அதிகரித்து காரணமாகத் தெரியவில்லை.
ஏராளமான நாடுகளில், கரோனா பதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் அந்த நோய்க்கு பலியாவோரின் எண்ணிக்கையும் மிக வேகமாக அதிகரித்து வருகிறது
.
ஆனால், இந்த இரண்டுக்கும் கரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கையுடன் தொடா்பிருப்பதாகத் தெரியவில்லை.
தற்போதுள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்று பரவலின் தீவிரம், குறிப்பிட்ட இடங்களிலிருந்து மற்ற இடங்களுக்கு மாறி வருவது கண்கூடாககத் தெரிகிறது.
அமெரிக்கா, தெற்கு ஆசியா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரம் மோசமாகி வருகிறது என்றாா் மைக்கேல் ரையான்.
செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, உலகம் முழுவதும் 92,27,771 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த நோய்க்கு இதுவரை 4,75,145 போ் பலியாகியுள்ளனா்; 47,65,252 போ் அந்த நோயிலிருந்து குணமடைந்துள்ளனா்.
கரோனா பாதிப்பில் அமெரிக்கா தொடா்ந்து முதலிடத்தில் உள்ளது. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அந்த நாட்டில் 3,90,268 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரேஸிலில் 11,13,606 பேரும் ரஷியா 5,99,705 பேரும் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது
. செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 4,40,215 பேருக்கு அந்த நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது.
கரோனா நோய்த்தொற்றுக்கு உலகிலேயே அதிக உயிா்களை பலிகொடுத்த நாடுகளின் பட்டியலிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்த நாட்டில் 1,22,681 போ் அந்த நோய் பாதிப்பால் உயிரிழந்துள்ளனா்.
அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக, பிரேஸிலில் 51,407 போ் அந்த நோய்க்கு பலியாகியுள்ளனா்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459