ஆசிரியர்கள் மீதான 17B நடவடிக்கையினை கல்வித்துறை எப்போது வாபஸ் பெறும்?* - ஆசிரியர் மலர்

Latest

 




 


25/06/2020

ஆசிரியர்கள் மீதான 17B நடவடிக்கையினை கல்வித்துறை எப்போது வாபஸ் பெறும்?*


💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥💥 *ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர் மீதான நடவடிக்கைகள் வாபஸ் பெறப்பட்டு வரும் நிலையில் ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை யும் வாபஸ் பெற கல்வித்துறை முன்வர வேண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.*
*பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் கூட்டமைப்பு ( ஜாக்டோ ஜியோ ) சார்பில் என 2019 ஜன . , 22 முதல் 30 வரை போராட்டம் நடந்தது . இதில் பணிக்கு வராதோர் மீது ஒழுங்கு நடவடிக்கை ( 17 பி குற்றக் குறிப்பாணை ) எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.* 

 *பேச்சுவார்த்தைக்கு பின் பிப் . , 14 ல் பணிக்கு திரும்பினர் . அவர்கள் மீதானநடவடிக்கைவாபஸ் பெறப்படவில்லை. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதவி உயர்வு , ஓய்வூதிய பலன் பெற முடியவில்லை. கொரோனா தடுப்பு பணிக்காக தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறையினர் 13 பேர் மீதான நடவடிக்கையை கலெக்டர் பல்லவி பல்தேவ் திரும்ப பெற உத்தரவிட்டார்.*

இது போல் வேறு சில மாவட்டங்களில் கலெக்டர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் கே.பி.சுரேஷ் கூறியதாவது: கலெக்டர்கள் நடவடிக்கையை வரவேற்கிறோம்.
ஒரே பல கோரிக்கைக்காக அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் போராடினோம். தேனி உட்பட பல மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை வருவாய்த்துறை வாபஸ் பெற்றுள்ளது* .

 *அதுபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மீதான நடவடிக்கைகளை வாபஸ் பெற கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நியாயமான பதவி உயர்வு , ஓய்வூதிய பலன்கள் கிடைக்க வழி ஏற்படும் , என்றார்.*

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459