சென்னையில் கொரோனாவை ஒழிக்க.. கூடுதலாக 1563 சிறப்பு மருத்துவர்கள் நியமனம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா? - ஆசிரியர் மலர்

Latest

 




 


10/06/2020

சென்னையில் கொரோனாவை ஒழிக்க.. கூடுதலாக 1563 சிறப்பு மருத்துவர்கள் நியமனம்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?


சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், கூடுதலாக 1563 மருத்துவர்கள் இன்று முதல் களமிறங்க உள்ளனர். தமிழகத்தில் சென்னையில்தான் மிக அதிகமாக கொரோனா தொற்று உள்ளது. மாநிலத்தின் 70 சதவீதம் அளவுக்கு நோயாளிகள் எண்ணிக்கை இங்கு பதிவாகியுள்ளது. இந்த நிலையில்தான், சென்னைக்கு தனி கவனம் செலுத்த 6 அமைச்சர்கள் கொண்ட குழுவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அமைத்தார். புதுச்சேரியில் ஒரே நாளில் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.. ஒருவர் பலிடபுள் மடங்காகும் படுக்கை வசதிஇதன் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனைகளில் கொரோனாவுக்கான சிகிச்சையளிக்கும் படுக்கை வசதி எண்ணிக்கை 10000மாக அதிகரிக்கப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார். இப்போது அது 5000 என்ற அளவில் உள்ளது
. எனவே டபுள் மடங்காக படுக்கை வசதி அதிகரிக்கப்படுகிறது.1563 மருத்துவர்கள்மற்றொரு பக்கம், மருத்துவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணிகளில் இறங்கியுள்ளது தமிழக அரசு. இதுபற்றி பீலா ராஜேஷ் இன்று கூறுகையில், 574 நான் சர்வீஸ் பீஜிஸ் ( -) பணியமர்த்தப்படுகிறார்கள். மே 31ம் தேதியுடன் பயிற்சி முடித்து தமிழகம் முழுக்க போஸ்டிங் போடப்பட்ட சர்வீஸ் பிஜி மருத்துவர்கள் 989 பேர் உள்ளனர். இந்த டாக்டர்களை டெபுடேஷனில் சென்னை வரவைத்துள்ளோம்.இன்று முதல் கூடுதல் மருத்துவர்கள்மருத்துவர்கள் உடனடியாக தங்களது சொந்த வாகனங்களில் சென்னை விரைந்து வந்துள்ளனர். ஆக மொத்தம். 1563 போஸ்ட் கிராஜுவேட் டாக்டர்கள் இன்று முதல் பணியில் சேர்ந்துள்ளனர். இதுதவிர ஒப்பந்த அடிப்படையில் 655 எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்களும் பணிக்கு சேர்ந்துள்ளனர்.ஊதியம்நான் சர்வீஸ் பிஜி மருத்துவர்களுக்கு மாதம் ரூ.75 ஆயிரம் சம்பளம். ஏனெனில் இவர்கள் முதுநிலை படித்தவர்கள். அதேநேரம், எம்பிபிஎஸ் டாக்டர்களுக்கு மாதம் ரூ.60,000 சம்பளமாகும். இதுதவிர ஏற்கனவே அரசு நியமித்துள்ள சர்வீஸ் பிஜி மருத்துவர்களுக்கு, ஏற்கனவே நிர்ணயித்த ஊதியம் வழங்கப்படும் (வழக்கமாக பிற டாக்டர்களைவிட அதிகம்).செவிலியர்கள் எண்ணிக்கைமருத்துவர்கள் எண்ணிக்கை மட்டுமல்ல செவிலியர்களை அதிகப்படுத்துவதற்கான உத்தரவையும் பெற்றுள்ளோம்.
விரைவில் அந்த நடவடிக்கை ஆரம்பிக்கும். இவ்வாறு பீலா ராஜேஷ் தெரிவித்தார். முன்னதாக 665 மருத்துவ அதிகாரிகள், 365 ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 1,230 பல்நோக்கு தொழிலாளர்களை மூன்று மாதங்களுக்கு அவுட்சோர்சிங் அடிப்படையில் நியமிக்க அரசு முடிவு செய்திருந்தது.ஊதிய உயர்வுஅவர்களில் பலர் குறைந்த ஊதியம் காரணமாக பணிக்கு சேரவில்லை. இதையடுத்து மருத்துவ அதிகாரிகளுக்கு, ரூ.40,000 முதல், ரூ.60,000 ஆகவும், ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு ரூ.10,000 முதல், ரூ.15,000 ஆகவும், பல்நோக்கு தொழிலாளர்களுக்கு, 6,000 ரூபாய் முதல், 12,000 ரூபாய் வரையிலும் ஊதியம் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சென்னையில் நிலைமையை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளில் களமிறங்கியுள்ளது என்பதற்கு இதுபோன்ற நடவடிக்கைகள் உதாரணமாகும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459