முகக்கவசம் அணியாத பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


24/06/2020

முகக்கவசம் அணியாத பிரதமருக்கு 13 ஆயிரம் ரூபாய் அபராதம்


கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 4 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக பல்வேறு நாடுகள் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வீடுகளை விட்டு வெளியே வரும் நபர்களுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.
இதற்கிடையில், பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற போது முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறி செயல்பட்ட நாட்டின் பிரதமருக்கு அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
பல்கேரியா நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக போது இடங்களுக்கு செல்லும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அமலில் உள்ளது. முக்கவசம் அணியாத மக்களுக்கு அபராதம் 
விதிக்கப்படுகிறது.
இந்நிலையில், பல்கேரியாவின் பிரதமரான பொய்க்கோ போரிசோவ் நேற்று அந்நாட்டின் ரிலா மனொஸ்டோரி நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு சென்றார்.
அங்கு பிரார்த்தனை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஈடுபட்டார். 
ஆனால், இந்த நிகழ்ச்சியின் போது பிரதமர் முகக்கவசம் அணியவில்லை. மேலும், அவருடன் சென்ற அதிகாரிகள் பலரும், பத்திரிக்கையாளர்களும் 
முகக்கவசம் அணியாமல் விதிகளை மீறியுள்ளனர்.
இதையடுத்து, கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற அமலில் உள்ள உத்தரவை மீறி முகக்கவசம் அணியாமல் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் பொய்க்கோ பொரிசோவ் உள்பட அதிகாரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாக பல்கேரிய சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மந்திரி கூறுகையில், முகக்கவசம் அணியாமல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் உள்பட அனைவருக்கும் தலா 300 லிவ்ஸ் (இந்திய மதிப்பில் 13 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459