அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சார்ந்த நீதி அரசர் கலையரசன் குழு அறிக்கை தாக்கல் - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/06/2020

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு சார்ந்த நீதி அரசர் கலையரசன் குழு அறிக்கை தாக்கல்


நீட் நுழைவுத் தேர்வால்,அ மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வேண்டும். என்று நீதி அரசர் கலையரசன் தலைமையிலான குழு பரிந்துரை செய்திருக்கிறது. இந்த தனி இட ஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து இவ்வமைப்பின் பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.இரவீந்திரநாத் விடுத்துள்ள ஊடகங்களுக்கான செய்தி. ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த,அடித்தட்டு சமூக மாணவர்கள் தான் அதிக அளவில், அரசுப் பள்ளிகள்,அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில் பயில்கின்றனர்.

இப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் இரண்டு முதல் 6 மாணவர்கள் வரை மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்கின்றனர்.இது சமூக நீதிக்கு எதிரானதாகும்.
நீட் நுழைவுத் தேர்விலிருந்து தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவக் கல்வி இடங்களுக்கு விலக்கு கிடைக்கவில்லை.
தமிழக அரசு,தமிழக சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய இரண்டு சட்ட மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுக் கொடுக்கத் தவறிவிட்டது.
 நீட் தேர்வு மூலம் மாநில உரிமைகளை மத்திய அரசு குழி தோண்டி புதைத்துவிட்டது.இதனால், அரசுப்பள்ளி மாணவர்கள்,மாநில பாடத்திட்டத்தில்,தமிழ் மொழியில் படிக்கும் மாணவர்கள்,கிராமப்புற ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மிகப்பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
எனவே, அரசுப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி,உள்ளாட்சி அமைப்புகளில் பயிலும், மாணவர்களுக்கு , அவர்கள் ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அப்பள்ளிகளில் படித்திருந்தால் அவர்களுக்கு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. பல போராட்டங்களையும்,கருத்தரங்கங்களையும் நடத்தியுள்ளது.
இந்நிலையில், இந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்துவது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்கிட, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு அமைத்தது
. இந்த குழு, அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள்,உள்ளாட்சி அமைப்புகளின் பள்ளிகளில், 6 முதல் 12 வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கு, 10 விழுக்காடு வரை இட ஒதுக்கீடு வழங்கிட பரிந்துரைத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. 
தனது அறிக்கையை தமிழக முதல்வர் அவர்களிடமும் வழங்கியுள்ளது. இப்பரிந்துரையை, நடப்பு கல்வியாண்டு முதலே நடைமுறைப்படுத்திட தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுக்க வேண்டும்.
அதிக மதிப்பெண் பெறும் அரசுப் பள்ளி மாணவர்களை, இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்குள் இடம் பெறும் வகையில் கட்டுப்படுத்தாமல் , இதர இட ஒதுக்கீடு இடங்களிலும்,பொதுப்போட்டி இடங்களிலும் இடம் பெறும் வகையில் சட்ட நிபுணர்களின் ஆலோசனைகளை பெற்று தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது
மேலும், தமிழக அரசு நடத்தும் நீட் பயிற்சி மையங்களை தரமானதாக மாற்ற வேண்டும்.வட்டாரம் தோறும், தங்கும் வசதியுடன் கூடிய பயிற்சி மையங்களை அரசு உருவாக்க வேண்டும்.நீட் தேர்வில் அதிக மதிப் பெண்ணுடன் அதிக மாணவர்கள் தேர்ச்சி பெறும் நிலையை தமிழக அரசு உருவாக்க வேண்டும். மேலும் அதன் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கானத் தேர்வின் மூலம் மற்ற மாநில மருத்துவ இடங்களையும், எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய அரசு நிறுவன இடங்களிலும் சேர முடியும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459