தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 25,872ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 14,316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்
. கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 208-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 1,012 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17,598 ஆக அதிகரித்துள்ளது. 9,034 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 158-ஆக உள்ளது.

இந்நிலையில் கொரோனா தொற்று இல்லாத மாவட்டமான திண்டுக்கல்லில் 10-ம் வகுப்பு மாணவிக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இருந்து கொடைக்கானலுக்கு தேர்வு எழுத வந்த 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சிகிச்சைக்காக மாணவி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து வாகன ஓட்டுநர், மாணவியின் தாய் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மாணவிக்கு தொற்று உறுதியானதை அடுத்து வாகன ஓட்டுநர், மாணவியின் தாய் ஆகியோர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 147 பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டு 123 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழந்துள்ளனர்
No comments:
Post a Comment