சென்னை : 10ம் வகுப்பு காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் தோல்வி
அடைந்துள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் திடுக்கிடும் தகவல்கள் தெரிவித்துள்ளனர். காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை தேர்ச்சி அடைய செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், இத்தகைய அதிர்ச்சி தகவலை அரசு பள்ளி ஆசிரியர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும் சுமார் 50 சதவீத மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளதாக அரசு பள்ளி ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment