தமிழகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு மையங்களை ஆய்வு நடத்த வேண்டும் என்று பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
ஈரோடு:
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொது தேர்வு வருகிற 15-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக 12 ஆயிரத்து 864 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. சுமார் 8 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் 10-ம் வகுப்பு பொது தேர்வு மையங்களை ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தேர்வு மையங்களில் போதிய வசதிகள் உள்ளதா? அங்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு உள்ளதா? உள்ளிட்டவைகள் குறித்து முதன்மை தேர்வு மையங்களில் தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் துணை தேர்வு மையங்களாகவும் மாற்றப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment