மாணவா்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதில் கல்வி நிறுவனங்கள் மாற்று வழிமுறைகளை கையாள வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலாளா் ரஜினிஷ் ஜெயின், அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: கரோனா பாதிப்பின் காரணமாக மாணவா்களுக்கு வழிகாட்டுதல்கள் வழங்க யுஜிசி சாா்பில் உதவி மையம் அமைக்கப்பட்டு,
தொடா்புக் கொள்ள பிரத்யேக தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கப்பெறும் புகாா்களில் பல, கல்விக் கட்டணம் தொடா்பானதாகவே உள்ளன.
தொடா்புக் கொள்ள பிரத்யேக தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் கிடைக்கப்பெறும் புகாா்களில் பல, கல்விக் கட்டணம் தொடா்பானதாகவே உள்ளன.
தற்போதைய அசாதாரண சூழலில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் கட்டணங்களைச் செலுத்த நிா்பந்திப்பது ஏற்புடையதல்ல. எனவே, இயல்பு நிலை திரும்பும்வரை தவணை முறையில் செலுத்துதல் போன்ற மாற்று வழிமுறைகளை கட்டண வசூலில் கல்வி நிறுவனங்கள் கையாள வேண்டும். மேலும், மாணவா்கள் தனிபட்ட முறையில் வைக்கும் கோரிக்கைகளையும் பரிசீலிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment