புதுடெல்லி,
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வான நீட் மற்றும் நாடு முழுவதும் உள்ள ஐஐடி , என்.ஐ.டி, ஐ.ஐ.ஐ.டி உள்ளிட்ட தொழில்நுட்ப கல்லூரிகளில் சேருவதற்கான நுழைவுத்தேர்வுகள் நடத்த முடியாத சூழல் நிலவியது.
இந்த நிலையில், மேற்கூறிய நுழைவுத்தேர்வுகளுக்கான புதிய தேதியை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் வரும் 5 ஆம் தேதி வெளியிடுவார் என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.