தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 776 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,967 -ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவல் ஒரு புறம் இருந்தாலும், சுமார் 50 நாள்களுக்கும் மேலாக தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவால் அரசின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசின் பொருளாதாரத்தை சற்று சரி செய்யும் நோக்கில், அரசின் செலவினங்களைக் குறைக்க முடிவு செய்யப்பட்டு, அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அந்த அரசாணையில், ‘தமிழக அரசின் செலவினங்களில் 20 சதவிகிதம் குறைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்புகளில் பயணிக்கத் தடை. நிர்வாக ரீதியிலான பணி மாற்றத்துக்கு மட்டுமே அனுமதி.
அந்த அரசாணையில், ‘தமிழக அரசின் செலவினங்களில் 20 சதவிகிதம் குறைக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்புகளில் பயணிக்கத் தடை. நிர்வாக ரீதியிலான பணி மாற்றத்துக்கு மட்டுமே அனுமதி.
அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்குவதைத் தவிர்க்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு அதிகாரிகளின் மதிய விருந்து, இரவு விருந்துகளைத் தவிர்க்க அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறைக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் போன்ற மற்ற பொருள்கள் மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தேவையான உபகரணங்கள் மட்டுமே கொள்முதல் செய்ய அனுமதி.
அதேபோல், ஆம்புலன்ஸ், தீயணைப்புத் துறை, முக்கியமான நபர்களின் பாதுகாப்பு, காவல்துறை ஆகிய துறைகளில் மட்டுமே வாகனம் கொள்முதல் செய்ய அனுமதி, மற்ற துறைகள் அடுத்த அறிவிப்பு வரும் வரை வாகனக் கொள்முதல் செய்யத் தடை விதிக்கப்படுகிறது. அரசு அதிகாரிகள் மாநிலத்துக்கு வெளியில் சென்றால், ரயில் கட்டணத்துக்கு இணையான கட்டணத்தில் பயணிக்க மட்டுமே அனுமதி. அரசின் காலி பணியிடங்கள் நிரப்புவது தற்காலிகமாகத் தடை செய்யப்படுகிறது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment