புதுடில்லி: கொரோனாவால் விடுபட்ட ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வுகள் மற்றும் ஐ.எஸ்.சி., 12ம் வகுப்பு தேர்வுகளுக்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் 14ம் தேதி வரை, விடுபட்ட தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘கவுன்சில் பார் தி இந்தியன் ஸ்கூல் சர்டிபிகேட் எக்சாமினேஷன்’ (CISCE) பாடத்திட்டத்தின் கீழ், இந்தியன் சர்ட்பிகேட் ஆப் செகண்டரி எஜூகேஷன்’ (ICSE) நடத்தப்படும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில், கொரோனாவால், ஜியாக்கிரபி, ஹிந்தி, பயாலஜி உள்ளிட்ட சில தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. மேலும் ஐ.எஸ்.சி., 12ம் வகுப்பு தேர்வுகளில் பயாலஜி, ஜியாகிரபி, சைக்காலஜி உள்ளிட்ட சில தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டன.
இந்நிலையில் விடுபட்ட இந்த தேர்வுகளுக்கான தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 2 முதல் 12ம் தேதி வரையிலும், ஐ.எஸ்.சி., 12ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1 முதல் 14ம் தேதி வரையிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.சி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 2 முதல் 12ம் தேதி வரையிலும், ஐ.எஸ்.சி., 12ம் வகுப்பு தேர்வுகள் ஜூலை 1 முதல் 14ம் தேதி வரையிலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள், தேர்வு நடைபெறும் இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், மாஸ்க் கட்டாயம் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் சானிடைசர்களை கொண்டு வர வேண்டும் எனவும், தேவையெனில் கையுறை அணிந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment