படப்பிடிப்பை விருதுநகர் மாவட்ட கல்வித் தொலைக்காட்சி ஊடக ஒருங்கிணைப்பாளர் கோ.ஜெயக்குமார்ஞானராஜ் முன்னிலையில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி விருதுநகர் கே.வி.எஸ்.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
அப்போது முதன்மைக் கல்வி அலுவலர் ம.க.செ.சுபாஷினி பேசுகையில் கூறியதாவது:
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை கிராமப் புறத்தில் உள்ள அரசுப் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களும் உயர்கல்வி பயில பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தற்போது நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வுகளை அரசுப் பள்ளி மாணவர்களும் எளிதாக எதிர்கொண்டு நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பில் சேர்ந்து பயன்பெற பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜே.இ.இ நுழைவுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கல்வித் தொலைக்காட்சி மூலம் இலவச பயிற்சி அளிக்க தமிழக பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.நீட் ,ஜே.இ.இ பயிற்சிக்கான படப்பதிவு தொட
இதற்காக கணிதம்,இயற்பியல் வேதியியல் ,விலங்கியல் ,தாவரவியல்,உயிரியல் ஆகிய பாடங்களில் அனுபவமிக்க ஆசிரியர்களைக் கொண்டு நுழைவுத் தேர்வு வகுப்புகளுக்கு கல்வித் தொலைக்காட்சியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர்களைக் கொண்டு கல்வித் தொலைக்காட்சியில் நுழைவுத் தேர்வு பயிற்சி அளிப்பதற்கான படப்பதிவு விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கியுள்ளது.
நுழைவுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை கல்வித் தொலைக் காட்சியில் கண்டு பயன்பெற வேண்டும் என்றார் அவர்.
No comments:
Post a Comment