வெள்ளரி தேங்காய்ப்பால் சாலட் செய்முறை - ஆசிரியர் மலர்

Latest

 




 


09/05/2020

வெள்ளரி தேங்காய்ப்பால் சாலட் செய்முறை


வீட்டில் இருக்கும் இப்போதைய சூழ்நிலையில் எதையாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கும். இதனால் உணவுத் தேடல் அதிகரிக்கிறது. எடை கூடுகிறது. இதைத் தவிர்க்க திரவ உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்வோருக்கு வயிறு நிறைந்த உணர்வு சீக்கிரமே ஏற்படும். பசியையும் தாகத்தையும் தவறாகப் புரிந்துகொள்ளாமல்,
பசி போலத் தோன்றும்போது சாலட் வகை உணவுகளையும் சாப்பிடலாம். இந்த சாலட் உணவுகள் உடலின் கழிவுகளை வெளியேற்றி, உடலில் நீர் வறட்சி ஏற்படாமலும் காக்கும்.
என்ன தேவை?
வெள்ளரி - 2
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2
எலுமிச்சைச்சாறு - ஒரு டேபிள்ஸ்பூன்
மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
தேங்காய்ப்பால் - 6 டேபிள்ஸ்பூன்
உப்பு - தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
வெள்ளரியை நடுவில் வெட்டி, துண்டுகளாக நறுக்கி உப்பு சேர்த்து ஐந்து நிமிடங்கள் வைக்கவும். பிறகு நீரை வடிகட்டிவிட்டு ஒரு பாத்திரத்தில் வெள்ளரி, பொடியாக நறுக்கிய தக்காளி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், நீளவாக்கில் நறுக்கிய வெங்காயம், மிளகுத்தூள், எலுமிச்சைச்சாறு, தேங்காய்ப்பால் சேர்த்துக் கலந்துவிடவும். வெள்ளரி தேங்காய்ப்பால் சாலட் தயார்.
குறிப்பு: விருப்பப்பட்டால் அன்னாசிப்பழத் துண்டுகளையும் சேர்க்கலாம்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459