பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பின்பே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும் அதற்கு முன்னதாக சேர்க்கை நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் பகுதியில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
No comments:
Post a Comment