கொரோனாவுக்கான தீர்வு காணப்பட்டவுடன் பதினோறாம் வகுப்பு பொதுத்தேர்வில் எஞ்சியுள்ள ஒரு தேர்வு நடைபெறும் தேதி குறித்து அறிவிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் தூய்மைப் பணியாளர்கள், நகராட்சி, வருவாய்த்துறை அலுவலர்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்கிய அவர், நீட் தேர்வுக்கான ஆன்லைன் பயிற்சி இன்று முதல் வழங்கப்படும் என்றார்.