தமிழகத்தில் நான்கு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை சோதனை - ஆசிரியர் மலர்

Latest

 




 


08/05/2020

தமிழகத்தில் நான்கு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை சோதனை



தமிழகத்தில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை உள்ளிட்ட நான்கு மருத்துவமனைகளில் பிளாஸ்மா சிகிச்சை சோதனைக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. 
கரோனா தொற்று பாதித்த நோயாளிகளுக்கு பிளாஸ்மா தெரபி சிகிச்சை அளிக்க நாடு முழுவதும் 21 மருத்துவமனைகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
இதில், தமிழகத்தில் 4 மருத்துவமனைகள் இடம் பெற்றுள்ளன. அதன்படி,
சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை, மதுரை அரசு மருத்துவமனை, நெல்லை அரசு மருத்துவமனை, வேலூர் சி.எம்.சி மருத்துவமனை ஆகிய இடங்களில் பிளாஸ்மா தெரபி சிகிச்சை சோதனைக்கு ஐ.சி.எம்.ஆர் ஒப்புதல் வழங்கியுள்ளது. 
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459