டெல்லி: பிரதமர் மோடி அறிவித்த 20 லட்சம் கோடிக்கான சலுகைகள் புதன் கிழமையன்று அறிவித்தார். அதில் எதிர்பார்க்கப்பட்டதைப் போல விவசாயிகளுக்கு சலுகை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில் தற்போது சில திட்டங்களை அறிவித்து வருகிறார்.
விவசாயம், சுய உதவிக் குழுக்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பலருக்கும் சலுகைகள் என்னென்ன என்று அறிவித்து வருகிறார்.
விவசாயிகளுக்கு 86,600 கோடி ரூபாய் கடன் கடந்த 2 மாதங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் 4,200 கோ ரூபாய் கடனுதவி மாநிலங்களுக்கு இந்த மார்ச் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நபார்டு வங்கியால் கூட்டுறவு வங்கிகளுக்கும், இதர பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் 29,500 கோடி ரூபாய் மறு மூலதனம் வழங்கப்பட்டுள்ளது.
விவசாய கடன் அட்டை
கடந்த இரு மாதங்களில் 15 லட்சம் விவசாயக் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும். அவர்களுக்கு 25 கோடி ரூபாய் வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அதோடு கடன் பெறும் விவசாயிகளுக்கு 3 மாத தவணை செலுத்த தேவை இல்லை எனவும் அறிவித்துள்ளார்.விவசாயிகளுக்கு 86,600 கோடி ரூபாய் கடன் கடந்த 2 மாதங்களில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு என்ன உதவி?
மேலும் வேளாண் பொருட்களைக் கொள்முதல் செய்வதற்காக மாநில அரசுகளுக்கு இந்த ஆண்டின் மார்ச் மாதம் முதல் இதுவரையில் ரூ.6,700 கோடி மூலதன உதவி வழங்கப்பட்டுள்ளது.கிராமப்புற மேம்பாட்டுத் திட்ட நிதியின் கீழ் 4,200 கோ ரூபாய் கடனுதவி மாநிலங்களுக்கு இந்த மார்ச் மாதத்தில் மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நபார்டு வங்கியால் கூட்டுறவு வங்கிகளுக்கும், இதர பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கும் 29,500 கோடி ரூபாய் மறு மூலதனம் வழங்கப்பட்டுள்ளது.
புலம் பெயர் மக்களுக்கு உதவி
மேலும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு, தங்கும் இடம் கொடுக்க மாநில பேரிடர் நிதியை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதோடு பேரிடர் நிதிகளை பயன்படுத்த மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஏற்கனவே அனுமதித்துள்ளது.3 கோடி முகக்கவசங்கள் மற்றும் 1.20 லட்சம் ..."