ஒவ்வொரு நாளும் அச்சத்தை மேலும் உருவாக்கும் வகையில் கொரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை, இந்தியாவில் கணிசமாக உயர்ந்து வருகிறது. வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 500 ஐ தாண்டி விட்டது.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும்,
உயிர்ப்பலியும் நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
மஹாராஷ்டிராவை பொறுத்தவரை, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்து 171ஆக உயர்ந்துள்ளது. அங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 832ஆக உயர்ந்தது.
குஜராத்தில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்து 200 - ஐ தாண்ட, அங்கு உயிர்ப்பலி 493 ஆக உயர்ந்தது.
டெல்லியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7 ஆயிரத்து 200 ஐ தாண்டி உள்ளது.
ராஜஸ்தானில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்க பலி எண்ணிக்கை 110 ஆக உயர்ந்தது
மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு, 3 ஆயிரத்து 600 ஐ தாண்ட,
அங்கு உயிரிழப்பு 215 ஆக அதிகரித்தது.
உத்தர பிரதேசத்தில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 500 ஐ நெருங்க, அங்கு 74 பேரை கொரோனா காவு வாங்கி விட்டது.
மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்தை நெருங்க அங்கு ஒரே நாளில் மட்டும் 11 பேர் கொரோனாவுக்கு இரை ஆகி உள்ளனர்.
ஆந்திராவில் ஆயிரத்து 900 பேருக்கு மேலும், பஞ்சாபில் ஆயிரத்து 800 பேருக்கு மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தெலங்கானாவில் கொரோனா பாதிப்பு, ஆயிரத்து 200 ஐ நெருங்குகிறது.
ஜம்மு - காஷ்மீரில் 861 பேரும் கர்நாடகாவில் 858 பேரும் பாதிக்கப்பட ஹரியானா , பீஹார், கேரளா மற்றும் ஓடிசாவிலும் வைரஸ் தொற்று உறுதி
ஆனவர்கள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 67 ஆயிரத்து 576 ஆக உயர்ந்தது. வைரஸ் தொற்றுக்கு இரை ஆனோர், எண்ணிக்கை 2 ஆயிரத்து 211 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 4 ஆயிரத்து 213 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனது. ஆயிரத்து 559 பேர், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனிடையே, நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.