சென்னை,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரத்தின் காரணமாக வழக்கமாக ஜூனில் திறக்கப்படும் பள்ளிகள் ஆகஸ்டு மாதத்தில் திறக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட உள்ளது. இந்த குழு தரும் அறிக்கையின் அடிப்படையில் பாடத்திட்ட குறைப்பு பற்றி முடிவெடுக்கப்படும்.
கொரோனா தொற்றின் தீவிரம் அதிகமாக உள்ளதால் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களை நெருக்கமாக அமரவைத்து வகுப்புகளை நடத்துவது சவாலாக இருக்கும் என்பதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை காலையிலும், 6 முதல் 12ம் வகுப்பு வரை பிற்பகலிலும் வகுப்புகள் நடத்த பள்ளிக்கல்வி துறை பரிசீலித்து வருகிறது.
இந்த நிலையில், ஜூன் 1ந்தேதி முதல் ஆன்லைன் வழியே வகுப்புகள் நடத்த திட்டமிட்டிருந்த தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment