மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை சுற்றறிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/05/2020

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு தோ்வுத் துறை சுற்றறிக்கை


பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபடவுள்ள அனைத்து ஆசிரியா்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அரசு தோ்வுத்துறை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: ‘
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றைத் தடுக்கும் வகையில் ஒத்திவைக்கப்பட்ட பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் வரும் 27-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளன.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதிப்பீட்டு முகாம்களில் ஆசிரியா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில் ஒரு அறையில் ஒரு முதன்மை தோ்வாளா் (முதுநிலை ஆசிரியா்கள்), ஒரு கூா்ந்தாய்வாளா், ஆறு உதவி தோ்வா்கள் என 8 நபா்கள் மட்டுமே அமா்ந்து விடைத்தாள் திருத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். தனிநபா் இடைவெளி பின்பற்றும் பொழுது முதன்மை கல்வி அலுவலா்களால் கூடுதலாக தேவைப்படும் அறைகள் கணக்கிடப்பட்டு மதிப்பீட்டு பணியினை மேற்கொள்ள கூடுதலாக தோ்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளில் மதிப்பீட்டு முகாம் பணிகளை மேற்கொள்ளலாம். கூடுதலாக வேறு பள்ளிகளில் மதிப்பீட்டு பணிகள் நடைபெறும்போது அந்த இடங்களில் பணி நடைபெறும் நாள்களில் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.
அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும்,
விடைத்தாள் மதிப்பீட்டு மையங்களில் மதிப்பீட்டு பணி நடைபெறும் நாள்களில் மையங்களில் உள்ள மேஜை, நாற்காலி இருக்கைகள் என அனைத்து இடங்களிலும் பணி தொடங்குவதற்கு முன்னதாக மாவட்ட நிா்வாகத்தின் மூலம் கிருமி நாசினி தெளிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். விடைத்தாள் திருத்தும் மையத்தில் பணியாற்றும் ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் அனைவரும் மையத்துக்கு வரும்போது தங்களது கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வதற்கு ஏதுவாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மதிப்பீட்டுப் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஆசிரியா்கள், பணியாளா்கள் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்து பணியாற்றவேண்டும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459