தொடர் வாசிப்பில் இன்று 8.5.2020 படித்த 33 வது புத்தகம் மேலாண்மை பொன்னுச்சாமி எழுதிய சிபிகள் என்ற கதைப்புத்தகம். இதில் 9 கதைகள் உள்ளன. 136 பக்கங்களை கொண்டது.
இந்த புத்தகத்திற்கு கி.ராஜ்நாராயணன் முன்னுரை எழுதியிருப்பார்.
மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வியில் இளங்கலை மாணவர்களுக்கான பாட நூலாக இருந்தது.
சுயம் : இக் கதையில் பூ வனம் காட்டு வேலைக்கு போய் அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் போது ரேசன் கடையில் அரிசி போடப் போவதாக தகவல்.அய்யயோ இப்ப தானே கடைக்காரனுக்கு பாக்கியை கொடுத்துட்டு வந்தேன். ரூபாய்க்கு என்ன செய்வது. வேலை முடிந்த கையோடு அவசர அவசரமாக நாயக்கர் வீட்டுக்கு போய் எட்டு நாள் சம்பளத்தை வாங்க சென்றாள். நாயக்கர் பணம் வாங்க சங்கரன் கோவில் சென்று விட்டதாக அவரது மகள் சொல்லி விடுவார். அடுத்து கனடக்காரரிடம் போய் கொடுத்த ரூ 20 பாக்கியை திரும்ப வாங்கி விடலாம் என வேக வேகமாக கடைக்குச் செல்வாள். அங்கு கடைக்காரர் சரக்கு வாங்க இராசபாளையம் சென்று விட்டதாக கடையிலிருப்பவர் சொல்ல மனம் பதை பதைக்கிறது. நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது .ரேசன் கடையை பூட்டி விடக் கூடாது .என்ன செய்ய போகவே கூடாது என முடிவு எடுத்திருந்த அக்கா வீட்டிற்கு சென்று ரூபாயை கடனாக வாங்கிக் கொண்டு வேகு வேகு என வீட்டிற்கு வந்து கூடையை எடுத்துக் கொண்டு ரேசன் கடைக்கு போக முற்படும் போது பையன் துட்டு கேட்டு நச்சரிக்க வந்து தருகிறேன் என சொல்லி படபடப்புடன் ரேசன் கடைக்கு செல்வாள். பையன் அழுது கொண்டே பின்னாடி வந்து கொண்டிருக்கிறான். ரேசன் கடையை பூட்டிக் கொண்டிருப்பார்கள்.. வேகமாக ஒடிச் சென்று நிலையைச் சொல்லி அரிசி கேட்பாள். நாளைக்கு வந்து வாங்கிக்க என ரேசன் கடைக்காரர் சொல்லி விடுவார். இவ்வளவு நேரம் தான் எடுத்துக் கொண்ட முயற்சி எல்லாம் வீணாகி விட்டதே என நொந்து கொண்டிருக்கும் போது பையன் அழுது கொண்டிருப்பான். தனக்கு ஏற்பட்ட நிலையை எண்ணி ஆத்திரத்தையெல்லாம் பையன் மீது காட்டி பையனை அடி அடியென அடித்துக் கொண்டிருப்பாள்.
ஏம்மா பச்சை மன்னை போட்டு இப்படி அடிக்கிற..வா வந்து அரியை வாங்கி கொண்டு போ என ரேசன் கடைக்காரர் ரூபாயை வாங்கிக் கொண்டு அரிசியை கொடுத்தனுப்புவார்.தனக்கு கிடைத்த வெற்றியை கண்டு சந்தோசப் பட்டு வீட்டிற்கு வந்து பையனை கட்டிக் கொண்டு என் பூச்சென்டை அடித்து விட்டேனே என்று கோவெனக் கதறினாள்.அவள் அவளாக தாயாக. இக்கதை ஜனரஞ்சனி, 29.3.1986-ல் ரூ 1000 முதல் பரிசுக் கதையாக தேர்வு செய்யப்பட்டது.
சிபி:
மயிலப்பன் எனும் பன்றிகளை மேய்ப்பவர் குறித்த கதை .தனக்கு காய்ச்சல் மிக அதிகமாக இருந்ததால் மகள் சென்தட்டியை இன்று ஒரு நாள் மட்டும் பன்றியை மேய்த்து விட்டு வரச் சொல்வார். முதலில் மறுப்பு தெரிவித்து விட்டு அப்புறம் சரியென பன்றிகளை மேய்க்கச் செல்வாள். அம்மா பார்த்து யாருடைய புஞ்சையிலும் பாழாக் காம பாத்துக்கோ.. சாயங்காலம் காய்ச்சல் குறைந்த மாதிரி தெரிந்தவுடன் பன்றிகளை மேய்க்கும் இடத்தை நோக்கி செல்லும் போது ஒரு புஞ்சையை பார்த்தவுடன் பழைய நினைப்பு. இந்த புஞ்சையில் பன்றிகள் ஒளப்பி நாசம் செய்து விட்டன. பயந்து கொண்டே புஞ்சைக் கார முதலாளியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பார் அதற்குரிய இழப்பீடுகளை கொடுத்து விடுகிறேன் என சொல்வார். அதற்கு வலியவன் நீ என்ன செய்வாய்.என்னுடைய நேரம் அவ்வளவு தான் என பெருந்தன்மையோடு மன்னித்து விடுவார்.இந்த மகாராசன் நல்லாயிருக்கனும் என மனதில் நினைத்தான். இப்ப அந்த புஞ்சையை தாண்டி போய் கொண்டு போனார். பன்றிகளை மேய்க்கும் தன் மகள் தட்டுப்படாததை பார்த்து இன்னும் முன்னேறிச் செல்வார்..தூரத்தில் ஒரு பள்ளத்தில் புஞ்சை நிலம் இருக்கும்.இதுவும் அந்த புண்ணியவானுக்கு சொந்தமான புஞ்சைதான்.
அந்த புஞ்சைக்கருகில் மகள் செந்தட்டியை அந்த புண்ணியவான் போட்டு அடித்துக் கொண்டிருப்பான். இனிமே இப்படி புஞ்சையில் பன்றியை மேய விட்டு பாழாக்குவாயா என சொல்லி அடிப்பதை பார்த்த மயிலப்பன் ஒடி வந்து மகளை கையில இழுத்து ஐயா தாயில்லா இந்த சின்ன பிள்ளையை இப்படி அடிக்கிறீங்களே.புஞ்சையை நாசமாக்கியது பார்த்து கொஞ்சவா முடியும்.ஐயா கொஞ்சம் பொறுத்துக் கொள்ள கூடாதா. எதுக்டா பொறுத்துக்கனும். பஞ்சாயத்து எலக்சன்ல என் சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடாத சாதிக்காரனுக்கெல்லாம் என்னத்துக்கு பொறுத்துப் போகனும். வாயடைத்துப் போனான் மயிலப்பன். நல்ல மனுசனா இருந்த அந்த புஞ்சக்காரரின் மனதை மாத்தியது .அதான் அவரே சொல்லிட்டார்ள. "ஏஞ் சாதிக்காரனுக்கு ஓட்டுப் போடாத சாதிக்காரனுக்...."
இக்கதை கல்கி 3.8.1986ல் ரூ1000 முதல் பரிசு பெற்ற கதை.
உள்மனிதன் :
தனது மனைவி மாசா இருப்பதை ஆஸ்பத்திரியில் காண்பிக்க பஸுக்காக காத்திருப்பார். இந்த ரூட்ல ஒரே பஸ் தான் .
இன்னிக்கு பார்த்து பஸ் ஒரு மணி நேரம் லேட்டு. பஸ்ஸை நிறுத்தி விட்டு டிரைவர் டீ சாப்பிட்டு விட்டு பஸ்ஸை எடுக்க வருவார். இவர் ஆத்திரத்தில் பஸ்ஸை சீக்கிரம் எடுங்க என சொல்ல டிரைவருக்கும் இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு வழியாக கண்டக்டர் தலையிட்டு பஸ் கிளம்பும். பாதி வழியிலேயே மனைவிக்கு பிரசவ வலி எடுக்க பக்கத்தில் இருக்கும் சில பெண்கள் ஆம்பளையெல்லாம் தள்ளிப் போகச் சொல் பி ஒரு சேலையை மறப்பாக்கி அப் பெண்ணுக்கு முதலுதவி செய்தனர். சீக்கிரம் ஆஸ்பத்திரி போய் ஆகனும் சொல்ல இது வரை இருந்த நிலைமை யெல்லாம் மாறி ஒருவருக்கொருவர் மனிதாபிமானத்துடன் செயல்பட்டது இவருக்கு என்னமோ மாதிரி இருந்தது. நாம் டிரைவரை சண்டை போட்டு விட்டோமே என நினைத்துக் கொண்டிருக்கும் போது டிரைவர் அடுத்து இறங்குபவர்கள் எல்லாம் அப்படியே இருங்க திரும்ப வரும் போது இறங்கிக்கலாம்
என சொல்லி எங்கேயும் நிற்காமல் இராசபாளையம் மருத்துவமனைக்கு சென்று பஸ் நின்றது.. தனது மனனவிக்கு மனித நேயத்துடன் உதவி செய்த டிரைவரை பார்க்க கூனிக்குறுகி நின்றார். அந்த டிரைவர் அவரது முதுகை தட்டி எதையும் பெரிதா நினைக்காம ஆக வேண்டியதை பாருங்க என சொல்லி விட்டு பஸ்ஸை எடுத்து சென்றார். இக் கதை ஜூலை 1985-ல் செம்மலரில் வந்தது.
இப்படி இதில் உள்ள அத்தனை கதைகளும் கிராமத்து வாசனையுடன் சொல்லப்பட்டுள்ளது. படிக்காதவர்கள் வாங்கி படிக்கவும்.
தோழமையுடன்,
க.ஷெரீப்,
சிவகாசி.