கொரோனா தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் தற்போது 4ஆம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. எனினும் சில தளர்வுகள் அடிப்படையில் டாஸ்மாக், கட்டுப்பாடுகளுடன் தொழில் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது.
இந்நிலையில் வரும் 31ஆம் தேதியுடன் இந்த ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில் மீண்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படுமா, அல்லது பேருந்து வசதிகள் அனுமதிக்கப்பட்டு ஊரடங்கு தளர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொடர்பாக மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி தலைமைச் செயலகத்தில் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழக அரசு நியமித்த இந்த மருத்துவக்குழு மாநிலத்தில் நிலவும் கொரோனா பாதிப்பு குறித்து முதலமைச்சரிடம் விளக்கம் அளிக்குமென தெரிகிறது. மே 31ம் தேதிக்கு பிறகு எடுக்கப்பட வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்பின்னர் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடத்தி பேருந்து இயக்குவது அல்லது ஊரடங்கை நீட்டிப்பது குறித்து அதிகாரப்பூர்வமாக முதல்வர் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment