கொரோனா காரணமாக ஊரடங்கு தொடர்ந்து நீடித்து வர, மாணவர்களின் கல்வி குறித்த கேள்விகள் எழத் தொடங்கியுள்ளன. இதற்கு, முதலில் பதில் அளிக்கும் வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது, உத்தரப்பிரதேச மாநிலம், கான்பூரில் உள்ள இந்திய தொழிநுட்ப நிறுவனம். கான்பூர் ஐஐடி-ல் பயிலும் மாணவர்கள், இந்தப் பருவத்திற்கு தேர்வேதும் நடத்தாமல் தேர்ச்சி அளிக்க அந்நிறுவனம் முடிவுசெய்துள்ளது.
கடந்த 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை, கான்பூர் ஐஐடி இயக்குநர் அபாய் கரண்டிகர் அறிவிப்பின்படி, இந்த ஆண்டு ஐஐடி-யில் பயிலும் அனைத்து மாணவர்களும் இந்தப் பருவத்திற்கான தேர்வு இல்லாமல், இடைக்கால மதிப்பெண்கள் உள்ளடக்கிய சிறப்பு மதிப்பெண்கள் மூலம் தேர்ச்சிபெறுவர்.
ட்விட்டரில் இதுகுறித்து பதிவிட்டுள்ள கான்பூர் ஐஐடி இயக்குநர், ஐஐடி மாணவர்கள் யாருக்கும் இந்தப் பருவத்தில் எந்தத் தேர்வும் நடத்த வேண்டாம் எனவும், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெறவேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
“மாணவர்களின் குழப்பங்களுக்குத் தீர்வுகாணும் வகையில், இந்த ஆண்டிற்கான (2019-20) இரண்டாம் பருவத் தேர்வுகள் இன்றி விரைந்து முடிக்கப்படும்
. இந்த ஒரு முறை மட்டும் தேர்வுப் பணிகள் புராஜெக்ட்டுகள் மற்றும் மாணவர்களின் செயல்திறனைக் குறிக்கும் இதர செயல்கள் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களால் அறிவுறுத்தபட்டு மதிப்புகள் பெறப்படும்.
. இந்த ஒரு முறை மட்டும் தேர்வுப் பணிகள் புராஜெக்ட்டுகள் மற்றும் மாணவர்களின் செயல்திறனைக் குறிக்கும் இதர செயல்கள் ஆன்லைன் மூலம் ஆசிரியர்களால் அறிவுறுத்தபட்டு மதிப்புகள் பெறப்படும்.
மேலும், மாணவர்களின் மதிப்பீடு தர (grade) அடிப்படையில் கணக்கிடப்படும். A,B,C மற்றும் S கிரேடு வழங்கப்படும். ஜூன் 30-ம் தேதிக்குள் அனைத்து படிப்புகளுக்கும் கிரேடுகள் வழங்கப்படும்” என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த கல்வியாண்டிற்கான சேர்க்கை யூஜிசி வழிகாட்டுதல்களின் படி, செப்டம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜேஈஈ (JEE), ஐஐடி (IIT) போன்ற கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வுகள் ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெறும். ஒருவாரத்திற்குள் முடிவுகள் அறிவிக்கப்படும். ஏழு கட்டங்களாக நடத்தப்படும் சேர்க்கை, ஆறு கட்டங்களில் நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment