சென்னை: அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, 59 ஆக உயர்த்தப்பட்டது, யாருக்கெல்லாம் பொருந்தாது என்பது குறித்து, தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அனைத்து துறை செயலர்களுக்கு, தலைமை செயலர், சண்முகம் அனுப்பியுள்ள கடிதம்: தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வு பெறும் வயது, 58ல் இருந்து, 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மறு பணி அமர்வு செய்யப்பட்டு, மே, 1 அல்லது அதற்கு முந்தைய நாள் ஓய்வு பெறுவோருக்கு, இந்த உத்தரவு பொருந்தாது.
ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆகியோர், 58 வயதானதும், ஓய்வு பெற்றாலும், கல்வியாண்டு முடியும் வரை, மறு பணியமர்வு செய்யப்பட்டு இருந்தால்
, அவர்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது. பணி நீட்டிப்பு காரணமாக சிலர், 60 வயதில் ஓய்வு பெறுவர்; சிலர் ஓய்வு பெற்று, ஒழுங்கு நடவடிக்கை நிறைவு பெறாமல் இருக்கும். இவர்களுக்கு எல்லாம் ஓய்வு பெறும் வயது உயர்வு பொருந்தாது.

ஓய்வு வயதை நீட்டித்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட, மே, 7ம் தேதி பணியில் இருந்தவர்கள், வரும், 31ம் தேதியில் ஓய்வு பெறுவதாக இருந்தால், அவர்களுக்கு மட்டும், இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.