சித்த மருத்துவ மூலிகை கலவையை நிபுணர் குழு பரிசீலித்து முடிவை தெரிவிக்க வேண்டும் : மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு - ஆசிரியர் மலர்

Latest

 




 


13/05/2020

சித்த மருத்துவ மூலிகை கலவையை நிபுணர் குழு பரிசீலித்து முடிவை தெரிவிக்க வேண்டும் : மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


கரோனாவை குணப்படுத்து வதாகக் கூறப்படும் சித்த மருத்துவ மூலிகை கலவையை நிபுணர் குழு பரிசீலித்து முடிவை தெரிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களை சி்த்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்பதை ஆய்வுகள் மூலமாக நிரூபிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிடக்கோரி விழுப்புரம் முத்துக்குமார் சங்கத் தலைவரான கே.எம்.செந்தமிழ்செல்வன் உள்ளிட்டோர் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து இருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதிகள் வினீத் கோத்தாரி,
ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வசந்தகுமார் ஆஜராகி, ‘‘கரோனாவுக்கு இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் சித்தா, ஆயுர்வேதா, போன்ற பாரம்பரிய மருத்துவத்தில் தடுப்பு மருந்துகளும், குணப்படுத்தும் மருந்துகளும் உள்ளன. இதை நிரூபித்துக்காட்டவும் மனுதாரர்கள் தயாராக உள்ளனர், என வாதிட்டார்.
அப்போது தமிழக அரசு தரப்பில் இதுதொடர்பாக நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதிகள், ‘‘கரோனாவை குணப்படுத்து வதாகக் கூறப்படும் சித்த மருத்துவ மூலிகை கலவையை நிபுணர் குழு ஒரு மாதத்தில் பரிசீலித்து அதன் முடிவை மனுதாரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்துள்ளனர்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459