நடப்பு ஆண்டில், பணி ஓய்வு பெற இருந்தவர்களுக்கு இந்த அறிவிப்பு பால் வார்த்திருக்கிறது என்றால், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்ற எதிர்பார்ப்போடு வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கானவர்களின் எதிர்காலக்
கனவுகளை கருக்கிவிட்டது அரசின் இந்த அறிவிப்பு!
இதுகுறித்துப் பேசும் ‘தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி’யின் பொதுச்செயலாளர் ச.மயில்,
”தமிழ்நாட்டில், படித்து முடித்து வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துள்ள இளைஞர்களின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டுகிறது. இதில், ஆசிரியர் பணியிடங்களுக்காகக் காத்திருப்போர் பட்டியல் மட்டுமே பல லட்சங்களைத் தொடும். கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகவே ஆசிரியர் காலிப் பணியிடங்கள் போதுமான அளவில் நிரப்பப்படவில்லை.
இந்நிலையில் அரசு இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது, வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பேரிடியாகவே இறங்கியிருக்கிறது. இதுமட்டுமல்ல… பதவி உயர்வுக்காக அடுத்தடுத்த நிலையில் காத்திருப்போருக்கும் அரசின் இந்த அறிவிப்பு, பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பள்ளிக்கல்வித் துறையில், எந்த வருடமும் இல்லாத வகையில், இந்த ஆண்டு மே 31-ம் தேதியோடு பெறப்போகிற ஆசிரியர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தது.
அதிலும் குறிப்பாக பழைய ஓய்வூதியத் திட்டத்தின் கீழாக பலன் பெறப்போகிற ஆசிரியர்களின் எண்ணிக்கையானது 90 சதவிகிதமாக இருந்தது. இதன்படி பணி ஓய்வு பெறுகிற ஓர் ஆசிரியருக்கு பணப்பலன்கள் மொத்தமாக 20 லட்சம் ரூபாய்வரை அரசு கொடுக்கவேண்டியிருக்கும். ஆக, இந்த நிதி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகத்தான் அரசு, இப்படியொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மற்றபடி எந்த ஓர் ஆசிரியரும் ‘பணி நீட்டிப்பு வழங்குங்கள்’ என அரசுக்குக் கோரிக்கை எதுவும் வைக்கவேயில்லை.