புதுடெல்லி,
நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுத்திட தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கோழி இறைச்சி மற்றும் முட்டை, இதர கோழி உணவுப்பொருட்கள் சாப்பிடுவதால் கொரோனா தொற்றுநோய் பரவக்கூடும் என்ற செய்தி பொதுமக்களிடம் பெரும் சர்ச்சையாக பரப்பப்பட்டு வந்தது.
அதையடுத்து கோழி இறைச்சி மற்றும் முட்டை உண்பதால் நமக்கு நன்மைகள்தான் ஏற்படும். நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்றுக்கும், கோழி இறைச்சி, முட்டை உண்பதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும் தயக்கம் இல்லாமல் அனைவரும் முட்டை மற்றும் கோழி இறைச்சியினை உட்கொள்ளலாம் என தமிழக அரசு அண்மையில் கூறியுள்ளது.
இந்நிலையில்,இறைச்சி உண்பதால் கொரோனா வைரஸ் தாக்கும் என்பதற்கு அறிவியல்பூர்வ ஆதாரம் இல்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment