மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


05/05/2020

மின்கட்டணம் செலுத்த அவகாசம் நீட்டிப்பு


சென்னை:
தமிழ்நாடு மின்சாரம் வாரியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
முந்தைய மாத கணக்கீட்டின்படி, மின்கணக்கீடு செய்யப்பட்ட தாழ்வழுத்த தொழிற்சாலை மற்றும் வணிக மின் நுகர்வோர்கள் தங்களது மின்கட்டணத்தை முந்தைய கணக்கீட்டின்படியோ அல்லது அவர்களது மின்அளவியில் உள்ள மின்நுகர்வுக்கு ஏற்பட திருத்தப்பட்ட பட்டியல்படியோ 22.05,2020 வரை மின் கட்டணம் செலுத்தலாம்.
வீட்டு உபயோக தாழ்வழுத்த மின் நுகர்வோர்களைப் பொறுத்தவரை எங்கெல்லாம் முந்தைய மாத கணக்கீட்டு தொகையின்படி கணக்கீடு செய்யப்பட்டுள்ளதோ, அந்த நுகர்வோர்களுக்கு அடுத்த மின் அளவீடு, சம்பந்தப்பட்ட அடுத்த மின் கணக்கீடு நாளன்று எடுக்கப்படும். எனவே, அவர்களுக்கு மின் கணக்கீடு இரண்டு இருமாத மின் அளவீட்டிற்கு மேற்கொள்ளப்படும்
. அவ்வாறு கணக்கீடு செய்யப்பட்ட மின் அளவீட்டிற்கான தொகையில், முந்தைய மாத மின் கணக்கீட்டின்படி செலுத்தப்பட்ட தொகையானது சரி செய்யப்படும்.
25.03.2020 முதல் 17.05.2020 வரை மின் கட்டணம் செலுத்த கடைசி தேதி உள்ள தாழ்வழுத்த நுகர்வோர்கள் தங்களது மின்இணைப்பிற்கான மின்கட்டணத்தை 22.05.2020 வரை தாமத கட்டணம் மற்றும் மறு மின்இணைப்பு கட்டணமின்றி செலுத்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459