பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் பணியில் ஈடுபடுத்த வாய்ப்பு உள்ளது.பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, ஜூன் 15 முதல் நடைபெறுவதாக, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு மையங்களில், துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
.ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:பொதுத்தேர்வு மையத்தில், ஒரு அறையில், 20 பேருக்குப் பதிலாக, 10 மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். கொரோனா தொற்றால், சமூக இடைவெளியைக் கருத்தில் கொண்டு, இவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதனால், தேர்வறைகளில், கண்காணிப்பாளர் பணிக்கு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மட்டும் போதாது.

எனவே தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களைப் பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில், ஆசிரியர் விவரங்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள், கல்வி மாவட்ட அலுவலர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது.இவ்வாறு, ஆசிரியர்கள் கூறினர்.
No comments:
Post a Comment