வேளாண் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்த விவசாயிகள்... நிதி அமைச்சர் உரையில் இடம்பெறாத அறிவிப்புகள் - ஆசிரியர் மலர்

Latest

 




 


15/05/2020

வேளாண் கடன் தள்ளுபடியை எதிர்பார்த்த விவசாயிகள்... நிதி அமைச்சர் உரையில் இடம்பெறாத அறிவிப்புகள்



விவசாயம், கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான திட்டங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் பல்வேறு அறிவிப்புகளை இன்று வெளியிட்ட நிலையில் விவசாய கடன் தள்ளுபடி பற்றி எதுவும் இடம்பெறாதது விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. ரூ.20 லட்சம் கோடி மதிப்பில் சுயசார்பு இந்தியா பொருளாதார தொகுப்பை கடந்த 3 நாட்களாக வெளியிட்டார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். தொழில் நிறுவனங்கள், வங்கிகள், புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சலுகைகள் குறித்து நேற்றும் நேற்று முன் தினமும் உரையாற்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று விவசாயிகளுக்கான திட்டங்கள் பற்றி அறிவித்தார்.விவசாய கடன் தள்ளுபடி பற்றியோ அல்லது விவசாய கடனுக்கான வட்டி தள்ளுபடி பற்றியோ இன்று நிதி அமைச்சரின் உரையில் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது விவசாய பெருங்குடி மக்களை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.
ve="true"> இதனிடையே இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விவசாய சங்க தலைவர் தெய்வசிகாமணி, மத்திய அமைச்சரின் அறிவிப்புகள் அனைத்தும் தற்போதைய சூழலுக்கு பயன் தராத வகையில் உள்ளதாக கூறியுள்ளார். மத்திய நிதி அமைச்சரின் அறிவிப்புகளுக்கு மற்றொரு விவசாய சங்க தலைவரான பி.ஆர்.பாண்டியன் வரவேற்பு தெரிவித்துள்ளார். தொலைநோக்கு பார்வையுடன் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் விவசாயிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என அவர் கூறியுள்ளார். விவசாயத் துறை சார்ந்த திட்டங்களை தாம் முழுமையாக வரவேற்பதாகவும்,
ve="true"> விவசாய கடன் தள்ளுபடி, புதிய கடன் தொடர்புடைய அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார். டாஸ்மாக் திறப்பு: இனி மக்களே, நீதி மய்யமாக மாற வேண்டிய நேரம் வந்து விட்டது.. கொதித்த கமல்ஹாசன்விவசாய கடன் தள்ளுபடியை தவிர கால்நடை, தேனீ வளர்ப்பு, விரைவில் அழியும் பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சலுகைகள், அத்தியாவசிய பொருள் சட்டத்தில் திருத்தம், விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க சட்டம் என எண்ணற்ற விவசாயிகள் நலன் சார்ந்த அறிவிப்புகள் நிதி அமைச்சரின் உரையில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459