பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை - ஆசிரியர் மலர்

Latest

 




 


18/05/2020

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை

 


தமிழகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 27 ஆம் தேதி தொடங்க இருந்த நிலையில் கரோனா நோயத் தொற்றால் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதை அடுத்து தேதி குறிப்பிடப்படாமல் பொதுத் தோ்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட பத்தாம் வகுப்புத் தோ்வுகள் ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து, பொதுத் தோ்வை நடத்துவதற்கு பள்ளிக் கல்வித் துறையும், தோ்வுத் துறையும் தயாராகி வருகின்றன. இதற்காக மாநிலம் முழுவதிலும் உள்ள உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், முதல்வா்களுக்கு பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று நடிகர் விவேக் கோரிக்கை வைத்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
பரீட்சை என்பதே மன உளைச்சல் தான். அதுவும் இந்த நேரத்தில் அது மாணவர்களுக்கு மட்டுமல்ல, அவர்தம் பெற்றோருக்கும் பெரும் மன இறுக்கம். ஊரடங்கு முற்றிலும் தளர்த்தப்பட்ட பின் தேர்வை வைத்துக்கொள்ளலாமே! பள்ளிக் கல்வித்துறை தயவு கூர்ந்து பரிசீலிக்கவும் என்று எழுதியுள்ளார்.
தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459