குடும்ப ஓய்வூதியத்தில் புதிய மாற்றம் செய்ய எதிர்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


23/05/2020

குடும்ப ஓய்வூதியத்தில் புதிய மாற்றம் செய்ய எதிர்ப்பு


சீர்காழி: குடும்ப ஓய்வூதியத்தில் புதிய மாற்றம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ள கணக்கெடுப்புகளை தொடங்கியுள்ள நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீர்காழி வட்டம் தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் மறுபரிசீலனை செய்திட வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்களாக இருந்து ஓய்வுபெற்ற தம்பதியரில் ஒருவரின் மறைவுக்கு பிறகு மற்றோருவர் இரண்டு ஓய்வூதியங்களை இனி பெற முடியாது.அவரது ஓய்வூதியம் அல்லது மறைந்த நபருக்கான குடும்ப ஓய்வூதியம் என இரண்டில் ஏதேனும் ஒன்றை மட்டுமே தேர்வு செய்யமுடியும்.
இதற்கான கணக்கெடுப்பை தீவிரமாக தமிழக அரசு நடத்திவருகிறது. 

தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 6 லட்சத்துக்கும் கூடுதலான ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் உள்ளனர். 
தற்போது அரசு கணக்கெடுத்து புதிய நடவடிக்கை எடுத்து ஒரு ஓய்வூதியத்தை குறைத்தால் வயது முதிர்வின் காலத்தில் இருவரின் ஓய்வூதியத் திட்டத்தின்படி வீட்டுக் கடன் பெற்று வீடு கட்டியவர்கள், பிள்ளைகளுக்கு திருமண செலவுக்காக கடன் பெற்றவர்கள் தங்கள் இருவருக்கும் வயது முதிர்வின் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறவர்கள், ஒருவர் மிகவும் நோய்வாய்ப்பட்டு பெருத்த கடன் செலவில் இயற்கை எய்தி,
இதனால் மூன்று விதமான கடன் தவணைத் தொகை மாதாமாதம் கட்டிக்கொண்டும் தொடர் மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார்கள்.  

இந்த நிலையில் இரண்டு ஓய்வூதியத்தில் ஒன்றை பிடித்தம் செய்தால்  மூத்த குடிமக்கள்  மிகவும் நலிந்த நிலைமைக்கு அரசால் உட்படுத்தப்படுவார்கள். எனவே, இதனை மறுபரிசீலனை செய்து இருவருடைய ஓய்வூதியமும் தற்போதைய நடைமுறை தொடர்ந்து இருந்து வர ஆவன செய்ய வேண்டும் என தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க சீர்காழி வட்ட கிளை தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459