வாஷிங்டன்: சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கரோனா தொற்று மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என்ற தகவல் மற்றும் தொற்று தொடர்பான விவரங்களையும் சீன அரசு மறைத்து விட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
தொற்றின் தோற்றுவாயான சீனாவில் பாதிப்பும், பலியும் குறைவாக உள்ள நிலையில்,
தொற்று பரவிய அமெரிக்காவில் கடுமையான பாதிப்பையும் பலியையும் ஏற்படுத்தியுள்ளது.
தொற்றின் தீவிரத்தன்மை குறித்து பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடுக்காமல் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்பட்டு வந்ததாகவும், அந்த அமைப்பின் தாமதமான செயல்களால் உலக நாடுகளுக்கு பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக டிரம்ப் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் அந்த அமைப்பிற்கு வழங்கும் நிதியை நிறுத்துவதாக அறிவித்த டிரம்ப், முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் ரூ. 3000 கோடி நிதியை நிறுத்தினார்.
இந்நிலையில், கரோனா தொற்று விவகாரத்தில் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இதுதொடர்பாக, அதிபர் டிரம்ப் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது.
ஆண்டுக்கு 450 மில்லியன் டாலர் வழங்கி வந்த அமெரிக்காவின் உறவை விட ஆண்டுக்கு 40 மில்லியன் டாலர் கொடுக்கும் சீனாவுடன் உலக சுகாதார அமைப்பு உறவு வைத்துள்ளது. இது தவறு உடனே திருத்திக்கொள்ளுமாறு உலக சுகாதார அமைப்பினை வலியுறுத்தியும் செவி சாய்க்கவில்லை.
சீர்திருத்தங்களைச் செய்யத் தவறிய அந்த அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக்கொள்கிறது. அந்த அமைப்பிற்கு வழங்கும் 450 மில்லியன் டாலர் நிதியை வேறு சுகாதார அமைப்பிற்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai , kalvoupdate,& job updates
No comments:
Post a Comment